செய்திகள்

ஜனநாயக தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் கீழ் கூட்டமைப்பு ஒன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

ஐக்கிய தேசிய முன்னணியில் தற்போது அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் சிவில் அமைப்புகள் உட்பட மேலும் சில கட்சிகளின் சார்பில் அவற்றின் பிரதிநிதிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இதில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாற்று குழுவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

Back to top button