அரசியல்
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது
அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார்.
19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சட்ட மா அதிபரின் நிலைபாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.