...
செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் மற்றுமொரு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

அதில், 14 பிரிவுகளும், 8 உப பிரிவுகளும் அடங்குகின்றன.

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் தொடர்பான விபரங்கள் அந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், வருடாந்தம் 10க்கும் மேற்படாதவாறு ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதவிவழி அடிப்படையில், அரச சட்ட அதிகாரிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கும்போது, இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen