செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நிறைவு செய்ய தீர்மானம்

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் நாளைய தினத்துடன் நிறைவு செய்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, விசாரணைகளின் போது பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை பரிசீலனை செய்து ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிக்காக எதிர்வரும் தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சகத்திற்கு பெற்றோல் கொள்வனவு செய்த போது இடம்பெற்ற மோசடிகள் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்க இன்று முற்பகல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தனர்.

Related Articles

Back to top button
image download