செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகளும் , தெரிவுக்குழுவில்…

ஏப்ரல் 21 தாக்குதல் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசேட விசாரணை தெரிவுக்குழு ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகளிடம் ஒரே தடவையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய அந்த ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட, செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் ஆகியோரிடம் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு விசாரணை நடத்தவுள்ளது. 

இதற்கமைய இவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button