செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரணில் ?

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்மரசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே பிரதமர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டதால், அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் அமைச்சர் தயா கமகே ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Articles

Back to top button