செய்திகள்

ஜனாதிபதி இன்றிரவு நாடு திரும்பவுள்ளார்.

இந்திய விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடுதிரும்பவுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி இன்று இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாரதிய ஜனதா கட்சியின் பிரதம செயலாளரை சந்தித்தார்.

இதன்பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றிரவ நாடு திரும்பவுள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார்.

ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர் கோட்டாபய ராஜபக்ச ஈடுபட்ட முதலாவது வௌிநாட்டு விஜயம் இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜயசங்கர் உள்ளிட்டோரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்தித்தார்.

Related Articles

Back to top button