செய்திகள்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப்  பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி நியமனம்…

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப்  பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி நியமனம்…
 
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார்.
 
15 வருட கால தனது ஊடக வாழ்வில் சிறந்த ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் திறம்படக் கடமையாற்றியுள்ளார்.
 
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக திருமதி. மேனகா மூக்காண்டி நியமனம் பெறுவதற்கு முன்னர் ‘தமிழ்மிரர்’ பத்திரிகையின் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றினார்.
 
 
 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.06.15

Sent from my Huawei phone

Related Articles

Back to top button