அரசியல்செய்திகள்

ஊடக சுதந்திரத்திரத்தை கட்டுப்படுத்த எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது..

நாட்டில் ஊடக சுதந்திரத்திரத்தை கட்டுப்படுத்த எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எந்தவொரு நியாயமான விமர்சனத்திற்கும் இடமுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

நாட்டுக்கும் நாட்டின் நற்பெயருக்கும் ஏற்றவகையில் ஊடகப் பணியில் ஈடுபட்டு, ஊடகங்களின் மூலம் நாட்டுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்குமென தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download