...
செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சர்வதேச சுற்றுலா தின செய்தி….

 
பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரை இலங்கையானது வரலாறு, சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த காலநிலைகளைக் கொண்டதான சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. 
சுற்றுலாத்துறை சம்பந்தமான பல்வேறு சேவைகளை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு அந்நியச் செலவாணியை வாரி வழங்குகினாலும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பாரியளவில் செயற்படாமல் இருக்கின்றது. 
இருப்பினும் உலகில் பல நாடுகள் பயணங்களுக்கான அனுமதியை வழங்கி வரும் இவ்வேளையில்,  சுற்றுலாப் பயணிகளின் கவனம் இலங்கையை நோக்கி அதிகரித்துள்ளது.
எனவே இலங்கையின் சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தனிமைப்படுத்தல் விதிகளின்படி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது சுற்றுலாத் துறை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகவும் ஆறுதலான ஒரு விடயமாகும்.
இன்றைய நாளில், உலகெங்கும் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளையும் இலங்கையின் அழகை ரசிக்க ஒரு ஆத்மார்த்தமான பயணத்திற்கு வருமாறு  அழைக்கிறேன்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen