மலையகம்

ஜனாதிபதி சந்திக்க உணவு, தண்ணீர் இன்றி நடைபயணத்தை ஆரம்பித்துள்ள தனி நபர்

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபா வழங்குவது தொடர்பான விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு உடனடியாக தீர்வு வழங்க வேண்டுமென கோரி தனி நபர் ஒருவர் நேற்றைய தினம் கொழும்பிற்கான நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்டத்தில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட சுப்பையா சந்தியேந்திரா தற்போது அவிசாவெல்ல பகுதியை வந்தடைந்துள்ளார்.

அவர் உணவு மற்றும் தண்ணீர் எடுக்காத நிலையில் நடப்பதால் அவரின் உடல் நிலை மோசமடைவதாக தெரிவியவந்துள்ளது.

எனவே அவிசாவெல்ல உறவுகள் அவருடன் தொடர்புகொண்டு தனது கோரிக்கை நிறைவேறுவதற்கு உதவி வழங்கமாறு  கேட்டு கொண்டுள்ளார்.

இதேவேளை, உயிர் போகும் வரை தோட்ட தொழிலாளர்களுக்காக என் போராட்டம் தொடரும் என தனது நடைபயணத்தை தொடர்ந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button