மலையகம்

ஜனாதிபதி தேசிய விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார் மலையகத்தின் கல்வியலாளர் எம்.வாமதேவன்

ஜனாதிபதி தேசிய விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார் எம்.வாமதேவன்!!

இவ்விருதானது ஒருபொதுத் தன்மைத்தான புகழ்தகவுடைய சேவைக்காக வழங்கப்படுகின்றது.
எம் வாமதேவன் பெருந்தோட்டத்துறை சமூகத்தினரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிக்காக பணியாற்றுவதில் பரந்த அனுபவங்களை கொண்ட ஒரு முன்னாள் சிரேஷ்ட நிர்வாகியாவார்.

நுவரெலியா கொட்டக்கலை பிரதேசத்தை சேர்ந்த இவர், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கற்று, பேராதனை பல்கலைகழகத்தில் பட்டத்தை பெற்றதன் பின்னர், அவர் 1970 இல் திட்டமிடல் பொருளாதார அலுவல்கள் அமைச்சில் ஒருதிட்டமிடல் உத்தியோகஸ்தராக இணைந்தார்.

தேசியதிட்டமிடல் திணைக்களத்தில் ஒரு மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படும் வரை அவ்வமைச்சில் பல்வேறுபதவிகளில் பணியாற்றினார். 2004 இல் இவர் சமூக அபிவிருத்தி அமைச்சில் செயலாளராகவும் அதன் பின் தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

தற்போது அவர் இலங்கை தேசிய பெறுகைகள் ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினராகவும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான புதியகிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையிலும் பணியாற்றுகிறார்.

வாமதேவன், பலபத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளுக்கு பல கட்டுரைகள் எழுதியுள்ளதோடு இலங்கையில் உள்ளபெருந்தோட்ட சமூகத்தினரின் சமூக பொருளாதார நிலைமை தொடர்பாக விரிவான ஆய்வுகளையும் நடத்தியுள்ளார்.

அவர் பெருந்தோட்டதுறை அபிவிருத்தி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தல், மற்றும் திறனை கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் வளவாளராக ஈடுபட்டுள்ளார். 2015 இல் அவர் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

வாமதேவன் தேசிய நூல் அபிவிருத்தி பேரவையினதும் ஓர் உறுப்பினராக இருந்துள்ளார். தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை,மீள் குடியேற்ற அதிகாரசபை மற்றும் உடப்புசல்லாவ மற்றும் ஹப்புகஸ்தன்ன பிராந்திய தோட்டக் கம்பனிகள் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளிலும் பணியாற்றியுள்ளார்.

நன்றி மலைநாடு

Related Articles

Back to top button
image download