அரசியல்செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்.

ஜனாதிபதி தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக நூற்றுக்கும் அதிகமான வௌிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

பொதுநலவாய நாடுகளை சேர்ந்த 20 கண்காணிப்பாளர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 60 பேரும், சார்க் நாடுகளை சேர்ந்த 25 பேரும் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக அறிவிப்பு கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, பொதுநலவாய நாடுகளை சேர்ந்த இரண்டு கண்காணிப்பாளர்கள் தற்போது நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாளைய தினம் நாட்டிற்கு வருகைதரவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் மற்றும் தேர்தலின் பின்னர் நாட்டின் நிலைமை ஆகியன குறித்து சர்வதேச கண்காணிப்பாளர்கள் , கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சிலவற்றிற்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கண்காணிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Back to top button