செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி பிரச்சார நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் வேட்பாளர்களுக்கும் , அரசியற் கட்சிகளுக்கும் தௌிவுப்படுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவுடன் பிரசார கூட்டங்களுக்கும்  ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைள் நிறைவடைவதுடன் பிரதேச மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரசார அலுவலங்களும் அகற்றப்பட வேண்டும என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான பதாகைகள், சுவரொட்டிகளை அகற்றும் பணிகளும் முன்னெடுக்கப்படுவதாக
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
image download