அரசியல்செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணி ஆரம்பம்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குசீட்டுக்களை அச்சிடும் பணி ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குசீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வாக்குசீட்டு அச்சிடும் பணிகள் நிறைவடையவுள்ளதாகவும் அரச அச்சக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இலங்கை தேர்தல்கள் வரலாற்றில் இத்தனை பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன்படி ஒரு வாக்குசீட்டின் நீளம் 26 அங்குலமாக காணப்படும் என அரச அச்சக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

Related Articles

Back to top button
image download