அரசியல்செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அனுர கூறியுள்ள முக்கிய தகவல்.

தொழில் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி முழுவதுமாக ரத்துச் செய்யப்பட்டு வரிக் கொள்கையில் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தங்காலை, குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மீனவ மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இந்த மாநாடு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டு மக்களை வறுமையில் வைத்திருப்பதே இந்த ஆட்சியாளர்களுக்கு தேவையாக உள்ளது. அப்போதுதான் வறுமையை விற்று வாக்கு சேகரிக்க முடியும்.

அவர்களின் பிரச்சாரத்திற்கு செல்லும் அனைவரும் வறியவர்கள்தான்.

அது ஏன்? வாழ்வதற்கு வழி ஒன்று இல்லாததால், வீடு கட்ட ஓடுகளை வாங்கிக் கொள்ள, கழிவறை கட்ட சிமெந்து மூடைகள் இரண்டையும் பெற்றுக் கொள்ளவாகும்.

இந்த ஆட்சியாளர்கள் வறுமையை விற்கிறார்கள்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் சிறந்த கிறிஸ்மஸ் தாத்தா ஒருவரை தேர்வு செய்வதை போன்றது.

உரம் இலவசமாக வழங்குவதாக கோட்டா கூறுகிறார். நான் வரும்போது ஒரு கோப்பை பால் தருவேன் என்று சஜித் கூறுகிறார்.

நாங்கள் எந்த வரியையும் அகற்ற மாட்டோம். அதை பற்றி நினைக்க வேண்டாம்.

வரிக் கொள்கையை நாங்கள் திருத்துவோம். அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி அகற்றப்பட்டு வரி திருத்தப்படும்.
தொழில் வரியை முற்றிலுமாக அகற்றுவோம்.

தொழில்துறை உற்பத்திகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

அவற்றை செயல்படுத்த ஒரு திறமையான குழு எங்களிடம் உள்ளது என்றார்.

Related Articles

Back to top button
image download