அரசியல்செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1359 முறைப்பாடுகள்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆயிரத்து 359 முறைபாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை 4 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த முறைபாடுகள் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 122 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள், 10 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் 38 முறைபாடுகள் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்துள்ளன.

முறைபாடுகளுக்கு அமைய 23 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 3 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button
image download