அரசியல்செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு சந்திப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை பாராளுமன்ற கட்டட தொகுதியில் கூடி விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இன்று பிக்றபகல் 02 மணித் தொடக்கம் மாலை 04.30 வரை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமதந்திரன், தரமலிங்கம் சித்தார்தன், எஸ்.சிவமோகன், சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர்  இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் தமிழ்த் சேயக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவினோம்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் இன்றும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்த அவர் அடுத்த வாரம் மீண்டும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடவுள்ளதாக அறிவித்தார்.

Related Articles

Back to top button
image download