அரசியல்செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கும் போட்டி – ஹக்கீம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கின்ற பாரிய போட்டியாகும்.

வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் தங்களின் அயோக்கியத்தனத்துக்கு அடைக்களமாக பயன்படுத்துகின்ற கும்பலுக்கு எதிராக மக்கள் தங்களது வாக்குப்பலத்தை பிரயோகிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று  வவுனியாவில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் பெருந்தொகையானோர் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டனர்.
 

இவர்களை கண்டுபிடிப்பதற்கு எவ்விதமான பொறிமுறைகளும் இல்லாமல் அவர்களின் அப்பாவி உறவினர் செய்வதறியாது தவித்தனர். 

தற்போதைய அரசாங்கத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனத்தின் உத்தரவின் பிரகாரம் காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளோம்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை இந்த ஆணைக்குழுவில் பதிவுசெய்ய முடியும்.
 

இதன்மூலம், காணாமலாக்கப்பட்டோரை கண்டறியும் விதத்தில், அவர்களது குடும்பத்தினரின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் வழங்கப்படும். 

அத்துடன் இழப்பீடுகளை வழங்கவும் அவர்களின் குடும்பத்துக்கு மறுவாழ்வாழ்வு அளிக்கவும் இதன்மூலம் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களை மீளமைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளது.
 

அதுமட்டுமன்றி, தனிப்பட்ட வன்மங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல், அட்டூழியங்கள், அட்டகாசங்கள் இனியும் தொடராமல் தடுப்பதற்கான உத்தரவாதங்களை தற்போதைய அரசாங்கத்தினால் சட்டமூலமாக அமுல்படுத்தியுள்ளோம் என்றார்.

Related Articles

Back to top button