செய்திகள்

ஜனாதிபதி நாடு திரும்பினார்.

கம்போடியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார். 

இன்று அதிகாலை 12.55 மணியளவில் ஜனாதிபதி உட்பட குழுவினர் நாட்டிற்கு வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

கம்போடியா அரசின் விசேட அழைப்பின் பேரில் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். 

இலங்கை ஜனாதிபதி ஒருவர் கம்போடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்

Related Articles

Back to top button