செய்திகள்

ஜனாதிபதி நாடு திரும்பினார்!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) காலை நாடு திரும்பினார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐநா பொதுச் சபையின் கூட்டத் தொடர் நடைபெற்றிருந்தது.

அதில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, இன்று (04) காலை 8.55க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.


Related Articles

Back to top button


Thubinail image
Screen