அரசியல்செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்து .

புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு ஜனாதிபதியும் பிரமதரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

சவால்களும் தடைகளும் நிறைந்த இன்றைய உலகில் பரஸ்பரம் மனிதர்களுக்கிடையில் இருக்க வேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவதற்கு ஹஜ் யாத்திரை சிறந்ததோர் முன்னுதாரணமாக அமைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை மற்றும் ஹஜ் யாத்திரை ஆகிய ஐம்பெரும் தூண்களின் மீது எழுந்து நிற்கும் இஸ்லாமிய மார்க்கமானது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான உன்னத பிணைப்பை எடுத்துக்காட்டுவதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புனித ஹஜ் யாத்திரை மூலம் சமத்துவம் பற்றிய செய்தியை சுமந்தவர்களாக ஹஜ் யாத்திரையில் பங்கேற்றோர் உட்பட நமது நாட்டிலும் உலகெங்கிலும் செறிந்துவாழும் சகல சகோதர இஸ்லாமியர்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மேலும் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இதேவேளை, இம்முறை ஹஜ் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுடன் அனைத்து இலங்கை மக்களும் இணைந்து எமது நாட்டின் சமாதானத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதை காண்பதே தனது எதிர்பார்ப்பு என பிரதமர் ரணில் தனது விக்கிரமசிங்க ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்திலுள்ள ஏழை – பணக்கார வித்தியாசத்தையும் வேறு பேதங்களையும் களைந்து சமத்துவம், சகோதரத்துவத்தை உருவாக்குவதே ஹஜ் பெருநாளின் முக்கியத்துவமாகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download