அரசியல்செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளருக்காக நாளைய நாள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு நாளை மாலை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, அந்தக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

தங்களின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸவை, மஹிந்த ராஜபக்ஸ நாளை பெயரிடவுள்ளார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ இந்த ஊடகவியலாளர் சந்திப்பன் போது தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்ஸவிடம் நாளை வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button