செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்குமிடையில் சந்திப்பு.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவோர், கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.

இன்று முற்பகல் 10.30 அளவில் இந்த சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய பல காரணிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் ஆயிரத்து 923 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button