உலகம்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் காலமானார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் நெஞ்சில் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் NHK செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2006 – 2007 மற்றும் 2012 – 2020 வரை பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே. ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற இடத்தை பிடித்தவர்.

நரா என்ற பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button