செய்திகள்

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ‘கஜாபாஹு’ கப்பலை பார்வையிட்டார்

உத்தியோகபூர்வ சுற்றுப் பயணம் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கென்ஜி ஹரதா, இலங்கை கடற்படை கப்பல் ‘கஜாபாஹு’வை பார்வையிட்டுள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ வருகையை முன்னிட்டு, ஜப்பானிய அமைச்சருக்கு கடற்படை மரபுகளுக்கு இணங்க மரியாதைக்குரிய அணிவகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கட்டளை அதிகாரி கஜாபாஹு´ கப்பலின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு பற்றி விளக்கியதாக கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையின் ஜப்பான் தூதர் அகிரா சுகியாமா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, ஜப்பானைச் சேர்ந்த அதிகாரிகள் குழு மற்றும் மூத்த கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த விஜயத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்க ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் கப்பலின் கட்டளை அதிகாரி இடையே நினைவு பரிசுகளும் பரிமாறப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button
image download