உலகம்

ஜப்பானில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து!

ஜப்பானில் சுற்றுலாப் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு ஹொக்கைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.சுற்றுலாப் படகுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. படகில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கடலோர காவல் படையினர் 8 ரோந்துப் படகுகளில் அப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 7 மணி நேரத்திற்கும் மேலாகியும் படகில் சென்றவர்களில் ஒருவரும் உயிருடன் கண்டறியப்படவில்லை என கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button