உலகம்

ஜப்பானில் தொடரும் மழை.

ஜப்பானில் பெய்துவரும் பலத்த மழையினால் எண்பதாயிரம் பேரை இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வௌ்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் சூறாவளியால் 82 பேர் உயிரிழந்ததுடன் 300 பேர் காயமடைந்தனர்.

பலர் காணாமல் போயுள்ள நிலையில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்துவருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button