செய்திகள்

ஜப்பானை சென்றடைந்தார் ஜனாதிபதி..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் ஜப்பானுக்கு சென்றார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஜப்பான் பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பேரரசர் நருஹிடோ பேரரசி மசாகோவுடன் பாராம்பரிய உடை அணிந்து இம்பிரியெல் மாளிகையின் பிரதான மண்டபத்திற்கு வருகை தருவதிலிருந்து முடிசூட்டு விழா உத்தியோகப்பூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் , சௌதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 நிமிடங்கள் இடம்பெறும் முடிசூட்டு விழா, பேரரசர் நருஹிடோவின் உரையுடன் நிறைவடையவுள்ளது.

இதனிடையே, நிகழ்வில் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவின் வாழ்த்துரையும் இடம்பெறவுள்ளது.

ஜப்பானின் 126 ஆவது பேரரசராக இளவரசர் நருஹிடோ முடிசூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download