செய்திகள்

ஜமாத்தே மில்லது இப்ராஹிம் அமைப்பின் மற்றுமொருவர் கைது!

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத்தே மில்லது இப்ராஹிம் அமைப்பின் அநுராதபுர மாவட்ட தலைவர் மொஹம்மட் இஸ்மாயில் மொஹம்மட் சல்மான் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய அம்பாறை பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவர் கஹட்டகஸ்திஹிலிய சம்பத்கம பகுதியைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபர் மொஹம்மட் சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட ஜமாத்தே மில்லது இப்ராஹிம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் மற்றும் பிரிவினைவாதத்தை பரப்பியதாக கூறப்படும் ஒலுவில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அம்பாறை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related Articles

Back to top button
image download