உலகம்

ஜம்மு காஷ்மீர் ஶ்ரீநகரில் குண்டுவெடிப்பு – ஒருவர் பலி.

ஜம்மு காஷ்மீர் ஶ்ரீநகரில் நடத்தப்பட்ட எறிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட மூன்றாவது எறிகுண்டு தாக்குதல் இதுவாகும்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக கூறப்படுகின்றது.

பொதுமக்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரத்தில் வடக்கு காஷ்மீரில் சோப்பூர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் காயமடைந்தனர்.

Related Articles

Back to top button
image download