செய்திகள்

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் திறந்த பிடியாணை

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்றை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதியினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லமால் ஜாலிய விக்ரமசூரியவின் பிணையாளர்களான அவரது மனைவி மற்றும் உறவினரை கைது செய்யவும் நீதிபதி பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயத்திற்காக கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்றவகையில் கையாண்டதற்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button