அரசியல்செய்திகள்

ஜெனிவா பிரேரணையை எதிர்ப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு -உதய கம்மன்பில

இராணுவத்திற்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றை முழுமையாக நிராகரிப்போம் எனவும், ஜெனிவா பிரேரணையை முற்றாக நிராகரிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எழுத்துமூலம் இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளோம். எந்தவொரு இடத்திலும் ஆணையாளரின் அறிக்கையை அரசாங்கம் ஆதரிப்பதாக கூறுவதற்கு நாம்  தயாராக இல்லை. அதேபோல் வடக்கு கிழக்கில் தற்போது இடம்பெற்று முடிந்துள்ள பேரணிகூட மக்களை ஏமாற்றும் நடவடிக்கையேயாகும். புலம்பெயர் புலி அமைப்புகளின் பணத்தினை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டங்களை சுமந்திரன் போன்றவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஏமாற்று நாடகங்கள் கூட சர்வதேச அரங்கில் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் சூழ்ச்சி என்பது தெளிவாக விளங்குகின்றது என்றார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com