...
செய்திகள்

ஜெர்மனியில் அதிகரித்து வரும் கொரானா மரணங்கள்

ஜெர்மனியில் கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த சில வாரங்களாக நாட்டில் கொரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 1,00,614 போ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

இது தவிர, கடந்த 24 மணி நேரத்தில் 33,679 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55,80,594-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜொ்மனியில் வியாழக்கிழமை நிலவரப்படி, 47,44,400 கொரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 7,35,580 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 3,987 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும்  ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டியலில் ஐந்தாவதாக ஜெர்மனியும் இணைந்து உள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen