மலையகம்
ஜேசுதாஸனின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து பதில் கடிதம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை வேதனத்தை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜேசுதாஸன் என்பவர் பொகவந்தலாவையில் இருந்து கொழும்பு நோக்கிய நடைபயணம் ஒன்றை கடந்த 28ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஜனாதிபதி செயலகம் மற்றும் அரச நிறுவனங்களுக்கு 17 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதங்களை வழங்கியிருந்தார்.
குறித்த கடிதத்திற்கு தற்பொழுது பதில் கடிதம் ஒன்றினை ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்பட்டுள்ளதாக ஜேசுதாஸன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜேசுதாஸன் கூறியுள்ளார்.