உலகம்

ஜேர்மனின் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு; பலர் படுகாயம்!

ஜேர்மனின் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காணாமல் போயுள்ளனர்.லெவர்குசன் நகரில் குறித்த தொழிற்சாலை அமைந்துள்ளதுடன் சம்பவத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிச்சம்பத்தினால் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல மணித்தியாலங்கள் எடுத்துள்ளதுடன் பிரதேசம் முழுவதும் கரும்புகையாக காட்சியளித்துள்ளது.

யன்னல்கள் மற்றும் கதவுகளை மூடிக்கொண்டு வீட்டினுள் இருக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் காணாமற் போனவர்கள் தேடப்பட்டு வருவதுடன் காயமடைந்தவர்களின் இருவரின் நிலை மிக மோசமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் இருந்த மூன்று பாரிய கொள்கலன்கள் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிச்சத்தம் பல கிலோமீற்றர் தொவிலும் கேட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியையும் அதனை சூழவுள்ள வாகன போக்குவரத்து வீதிகளையும் பொலிஸார் மூடியுள்ளனர்.

Related Articles

Back to top button
image download