உலகம்செய்திகள்

ஜேர்மனியில் கத்திக்குத்து மூவர் பலி : ஐவர் ஆபத்தான நிலையில்

ஜேர்மனியின் வூஸ்பர்க் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் பலியாகியுள்ளதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியொரு நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய நபர் மன நலம் பாதிக்கபட்டவர் எனவும், சமீபத்தில் இதற்காக சிகிச்சை பெற்றிருப்பதாகவும் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button