அரசியல்செய்திகள்

ஜே.வி. பி யின் முடிவு வெளியானது.

புதிய அரசாங்கத்திற்கு முறையான எதிர்க்கட்சியாக செயற்பட மக்கள் விடுதலை முன்னணி தயாரென நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியாக செயற்படகூடிய திறன் ஐக்கிய தேசியக் கட்சியிடம் தற்போது இல்லை எனவும் தமது கட்சிகே எதிர்கட்சியாக செயற்படக்கூடிய திறன் காணப்படுகின்றது எனவும் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நாட்டை ஆட்சி செய்ய 1825 நாட்கள் காணப்படுகின்றது.

இதில் 14 நாட்கள் தற்போது நிறைவடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் கோட்டாபய, தனக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையை எவ்வாறு பயன்படுத்துவார் என்பது தொடர்பாகவும் அவதானித்து வருவதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button