அரசியல்

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டர்ன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை நாளைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சதொச நிறுவனத்திற்கு சொந்தமான அரச நிதியை கடந்த அரசாங்கத்தின் அமைச்சராகவிருந்த போது, முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கடந்த அரசாங்க காலத்தில், லக் சதொச மூலம் 50 இலட்சத்திற்கு அதிக பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து, பணம் செலுத்தாமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கை நாளைய தினம் முதல் தொடர் விசாரணையாக நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button