நுவரெலியாமலையகம்

டயகமவில் இன்றும் ஆர்ப்பாட்டம் -சிறுவர்களை வேலைக்கு அனுப்பாதே ..

டயகம மேற்க்கு 05ம் பிரிவில் இன்று சிறுமி இஷாலினிக்கு நீதி கோரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 03 மணிக்கு குறித்த தோட்ட பொதுமக்கலால் முன்னெடுக்கப்பட்டது.

டயகம மேற்க்கு 05 ம் பிரிவில் தொடங்கி மூன்றாம் பிரிவு வரை குறித்த ஆர்ப்பாட்டம் சென்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இஷாலிக்கு முறையான நீதிவேண்டும், மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுக்கவேண்டும் என்று கோசம் எழுப்பியதோடு ,குறித்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வட்டியினால் பல குடும்பங்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவித்து ஆர்ப்பாட்ட காரர்கள் கோசம் எழுப்பினர்.


Related Articles

Back to top button