
நுவரெலியா டயகம பகுதியில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு நிர்மாணிக்கப்பட்ட 150 வீடுகள் இன்று பெருந்தோட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
நீதிமன்றத்திற்கு தலையீடு செய்ய முடியாத அளவிற்கு பாரதூரமானதாக வேதன உயர்வுக்கான கூட்டு உடன்படிக்கை உள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் இதன் போது கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டுத் திட்டத்திற்காக 170மில்லியன் ருபா நிதி செலவிடபட்பட்டுள்ளது.
‘ஆபிரஹாம் சிங்ஹோ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டுத்திட்டத்தை அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அழைப்பின் பேரில் காணி மற்றும் நாடாளுமன்ற மறு சீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க திறந்து வைத்தார்.