Breaking Newsநுவரெலியாமலையகம்

டயகம சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்..

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீ காயங்களுக்கு உள்ளாகி மரணமான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றும் ஹட்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை ஹட்டன் நகரில் 10 மணி அளவில் ஆரம்பமானது.

ஆர்பாட்டத்தின் போது தமிழ் முற் போக்கு கூட்டணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் உதயா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன் போது உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும் இந்த ஆர்பாட்டம்முன்னெடுப்பட்டதாக ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர் .மேலும் சிறுவர்களை வேலைக்கு அனுப்புவதையும் ,தரகர்களையும் எதிர்த்தும் ஆர்ப்பாட்டத்தின் குரல் எழுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button