செய்திகள்மலையகம்

டயகம- சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி டயகம பிரதேச மக்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டம்..

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீ காயங்களுக்கு உள்ளாகி மரணமான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி டயகம பிரதேச மக்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று பி .ப 2.30 மணி அளவில் ஆரம்பமானது.

குறித்த உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும் இந்த ஆர்பாட்டம்முன்னெடுப்பட்டதாக ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர் .மேலும் சிறுவர்களை வேலைக்கு அனுப்புவதையும் ,தரகர்களையும் எதிர்த்தும் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பட்டன.

Related Articles

Back to top button