செய்திகள்

டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரிக்க விஷேட குழு நியமனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிவந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் தலைமையில் இந்த குழுவை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் நியமித்துள்ளார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இன்று (22) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்தே, சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button