கல்வி

டயகம சௌமிய முர்த்தி தொண்டமான் கல்லூரிக்கு புதிய திறன் வகுப்பறைகள்..

நுவரெலியா டயகம சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியின் மாணவர்களின் நலன்கருதி  இலங்கை, இந்திய சமுதாய பேரவையின் ஏற்பாட்டில் திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வு 09/04/21 அன்று இடம்பெற்றது.

இதன்போது இலங்கை,இந்திய சமுதாய பேரவையினால் தெரிவுசெய்யப்பட்ட மாணவ,மாணவிகளுக்கான புலமைப்பரிசிலும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை,இந்திய சமுதாய பேரவையின் தலைவர் ராஜு சிவராமன், மற்றும் அங்கத்தவர்கள், முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சக்திவேல், பிலிப்குமார், நகர, பிரதேச சபை தலைவர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com