செய்திகள்மலையகம்

டயகம- தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்து போன சிறுமிக்கு நீதி கோரி நோர்வுட் பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் நீதி அமைச்சருக்கு கடிதம்

பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாத் பதியுதீன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்து போன சிறுமிக்கு நீதி கோரி நோர்வுட் பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் நீதி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் 15 வயதிட்குட்பட்ட சிறுமியை வேலைக்கு அமர்த்தி தவறிழைத்ததோடு அச்சிறுமியின் தீ விபத்துக்கும் பொறுப்பாக காணப்படுகின்றார்; எனவே சிறுமியின் மரணத்துக்கான நீதியை பெற்று தருமாறு குறித்த கடிதம் மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரியா

Related Articles

Back to top button