டயகம பகுதியில் காற்றுடன் பெய்த கடும் மழையின் காரணமாக பாடசாலை வளாகத்தில் ( டயகம 03 மேற்கு) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள எமது நிருபர் தெரிவித்தார்.அதே நேரம் பல பெறுமதியான விவாசாயம் உட்பட விவாசாய காணிகளும் பாதிப்படைந்துள்ளதாகவும்,அங்குள்ள மக்கள் குடியிருப்புகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். டயகம பகுதியில் இதுவரை மழை காலங்களில் இப்படி ஒரு பாதிப்பை கண்டதில்லை என மக்கள் குறிப்பிடுவதாகவும் குறிப்பிட்டார் .
சபீத்