மலையகம்

டயகம போடைஸ் பஸ் விபத்தில் 25 பேர் படுகாயம்

நேற்று டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று டயகம ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் குடைசாய்ந்ததில் பஸ்ஸில் பயணித்த 25 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹட்டன் பகுதிக்கு சென்ற குறித்த பஸ் நேற்று மாலை 3.30 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த இவ் விபத்தில் காயமடைந்த 25 பேரில் 4 பேர் பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ் விபத்து தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button