சமூகம்

இரத்தினபுரி,பிரதேசத்தில் மற்றுமொரு நீலக்கல் கொத்தணியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 80 கிலோ நிறையுடைய மற்றுமொரு நீலக்கல் கொத்தணியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் நீலக்கல் கொத்தணி இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்பெறுமதி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனை சீனாவில் எதிர்வரும் நவம்பரில் இடம்பெறவுள்ள ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னதாக இரத்தினபுரி, கஹவத்த பிரதேசத்தில் உலகிலேயே மிகப்பெரிய நீலக்கல் கொத்தணியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

510 கிலோ நிறையுடைய அக்கொத்தணியின் பெறுமதிய அண்ணளவான 100 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button