...
செய்திகள்

டெல்டா வைரஸின் பிறழ்வுகளை அறிய சிறப்பு விசாரணை

இலங்கையில் காணப்படும் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் மூன்று பிறழ்வுகள் கொழும்பு மற்றும் பிற பகுதிகளுக்கு பரவியிருக்கிறதா என்பதை அறிய சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு மூலம் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.

விசாரணை நிறைவடைந்த பின்னர், விரிவான அறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலா குணவர்தனவிடம் ஒப்படைக்கப்படும்.

டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி SA 222V, SA 701S மற்றும் SA 1078S ஆகிய டெல்டா வைரஸின் பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன செவ்வாயன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen